மட்டன் குழம்புக்கு மட்டன் மசாலா பொடி
மசாலா செய்ய தேவையான பொருட்கள்:
மல்லி விதை – 100 கிராம்
சீரகம் – 50 கிராம்
மிளகு – 50 கிராம்
சோம்பு – 50 கிராம்
பட்ட மிளகாய் – 15
பட்டை – 1
கருவேப்பிலை – 1 கைப்பிடி
உப்பு – தேவையான அளவு
செட்டிநாடு மட்டன் குழம்பு செய்வது எப்படி.?
முதலில் அடுப்பில் ஒரு அகலமான பாத்திரத்தை வைத்து, பாத்திரம் சூடானதும் அதில் மல்லி விதை, சீரகம், மிளகு, சோம்பு, பட்ட மிளகாய் மற்றும் பட்டை ஆகியவற்றை சேர்க்கவும்.
அடுத்து, 1 கைப்பிடி அளவிற்கு கருவேப்பிலையை எடுத்து தண்ணீர் இல்லாமல் துடைத்து விட்டு இதனுடன் சேர்த்து கொள்ளுங்கள்.
இப்போது, அடுப்பை மிதமான தீயில் வைத்து , பொன்னிறமாக வரும்வரை வறுக்கவும். மசாலா பொருட்களை நிறம் மாறி வாசம் வந்ததும், அதனை இறக்கி நன்றாக ஆறவைத்து கொள்ளுங்கள்.
மசாலா பொருட்கள் நன்றாக ஆறியதும், அதனை ஒரு மிக்ஸி ஜாரில் சேர்த்து பொடியாக அரைத்து எடுத்துக்கொள்ளுங்கள்.
இந்த பொடியினை ஒரு சுத்தமான பேப்பர் அல்லது பெரிய அகலமான தட்டில் கொட்டி பரப்பி விட்டு, ஆறவைத்து கொள்ளுங்கள்.
மசாலா பொடி நன்றாக ஆறியதும், அதனை ஒரு டப்பாவில் சேர்த்து நன்றாக மூடி வைத்து கொள்ளுங்கள்.
அவ்வளவு தாங்க சுவையான மணமணக்கும் மட்டன் மசாலா பொடி தயார். இந்த பொடியை நீங்கள் மட்டன் குழம்பு வைக்கும்போது எடுத்து பயன்படுத்தலாம்
Share this content:

Post Comment